பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். அரசின் திட்டத்திலிருந்து உறுதியான லாபத்தைப் பெறுவதோடு, தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும்
பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். அரசின் திட்டத்திலிருந்து உறுதியான லாபத்தைப் பெறுவதோடு, தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும்.
அஞ்சல் அலுவலக திட்டங்களில் PPF என்று சொல்லப்படுகிற பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வழி. இந்தத் திட்டம் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கிறது. PPF திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ. 1.5 லட்சம். தற்போது PPF திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அது மட்டும் இன்றி, இந்த PPF திட்டத்தில் இருந்து நீங்கள் வரிச் சலுகைகளையும் பெற முடியும். PPF திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்ச ரூபாய் வருமானம் பெறுவது எப்படி?: ரூ. 24 லட்சத்தைப் பெற விரும்பினால் தினமும் 250 ரூபாய் சேமித்தால் போதுமானது. அப்படியானால் மாதத்திற்கு ரூ.7,500. PPF திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 7,500 முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள்.
நீங்கள் 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டம் 15 வருட திட்டமாக இருப்பதால், 40 வயது வரை மொத்தம் ரூ.13,50,000 முதலீடு செய்வீர்கள். இந்தத் திட்டத்தில் 7.1 சதவீத வருமானத்தைப் பெற்றால், வட்டியாக ரூ. 10,16,760 கிடைக்கும், மேலும் மொத்த முதிர்வுத் தொகை தோராயமாக ரூ.23,66,757 ஆக இருக்கும்.
மேலும் PPF திட்டம் EEE (Exempt Exempt Exempt) வகை திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள், முதலீட்டுத் தொகைக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதற்கு முற்றிலும் வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
உதாரணமாக குழந்தை பிறந்தால் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற திட்டங்களில் பெற்றோர்கள் முதலீடு செய்வார்கள். அதே போன்று PPF திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். அப்படியானால் குழந்தைக்கு 15 வயது ஆகும்போது ஒரு பெரிய தொகை உங்கள் கையில் இருக்கும். அதை வைத்து அவர்களின் கல்விக்காக செலவு செய்யலாம்.