தைப்பொங்கலுக்கு ரூ.2000 தர்றாங்களா.. தமிழக அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு?

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தமிழக அமைச்சர் நம்பிக்கை தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஒரு சில தகவல்கள் கடந்த சில நாட்களாகவே வட்டமடிக்க துவங்கி உள்ளன.. தற்போது மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டுவருகிறது.

இந்த உரிமைத்தொகை வழங்குவதில் சில சலசலப்புகளும் அவ்வப்போது எழுந்தபடியே உள்ளது. தகுதியுள்ள அனைவருக்குமே 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது.

மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் அதிருப்தி நிலவுவதாலும், எம்பி தேர்தல் நெருங்குவதாலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, வரும் பொங்கல் பரிசு தொகுப்பில் 1,000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்கலாமா என்று தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன..

ஒருவேளை, பொங்கல் பரிசு தொகுப்பில் 2000 ரூபாய் இடம்பெற்றால், தமிழக மக்களுக்கு இது மிகப்பெரும் தித்திப்பு தரும் செய்தியாகவே இருக்கும் என்கிறார்கள்.

கல்விக்கடன்: இதற்கு நடுவில், 2 நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் வழங்க முயற்சி எடுக்கப்படும்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்… பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்” என்று நம்பிக்கை தகவலை வெளியிட்டிருந்தார்.

ஆனால், 2000 ரூபாய் வழங்கப்படுமா? என்பது குறித்து கூறவில்லை. அதேபோல, இதுகுறித்து எந்த அறிவிப்பையும் அரசு தரப்பிலும் வெளியிடவில்லை. இந்நிலையில், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

2000 ரூபாய்: “தமிழகத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பயனாளிகளின் ஆண்டு குடும்ப வருமானம் ரூபாய் 1.20 லட்சம் என்பதை உயர்த்துவதற்கான கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். முதல்வர் கோவைக்கு வரும்போது, அரசு கட்டிடங்கள் என்னென்ன தயார் நிலையில் உள்ளதோ, அவற்றை மட்டுமே திறந்து வைப்பார்.

தைப்பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுமா அல்லது ரூபாய் 2000 ரொக்க பணம் வழங்கப்படுமா என்பதை முதல்வர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் பொங்கல் பரிசுக்கான அறிவிப்பை வெளியிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments