தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து பார்க்கலாம்.
நாட்டில் இளைஞர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து, கல்வி கற்பித்து, திறன் கொண்டவர்களாக மாற்றினால் ஒட்டுமொத்த நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போகும் ஆற்றலும் இந்த இளைஞர் பட்டாளம் தான்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் பெரும்பாலான திட்டங்கள் என்பது இளைஞர்களை மையப்படுத்தி தேச வளர்ச்சியை முன்னெடுப்பதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுகிறது.அந்த வகையில், இளைஞர்கள் தற்சார்பு பொருளாதாரத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்ற இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்கிக் கொள்ளும் வகையில் மத்திய அரசு சார்பில் கடனுதவி வழங்கப்படுகின்றது.