நாகலாந்து மாநிலத்தின் முதல் மருத்துவ கல்லுரியை திறந்து வைத்தார் ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. மாநில அந்தஸ்து கிடைத்த 60 வருடங்களில் இங்கு தொடங்கப்பட்டுள்ள முதல் மருத்துவக் கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகலாந்து மாநிலத்தில் முதல் முறையாக மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு மருத்துவகல்லூரியை திறந்து வைத்தார். இதில் பல முக்கியமான அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
கல்லூரியில் மொத்தமுள்ள 100 இடங்களில் மாநிலத்தை சேர்ந்த 85 மாணவர்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். விழாவில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள முதல் மருத்துவ கல்லூரியானது மருத்துவ கல்லூரியாக மட்டும் இல்லாமல் ஆராய்ச்சி மையமாகவும் திகழும் ” என்றார்.