நாா்வே கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பலொன்றின் மீது யேமன் நாட்டின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினா். எனினும், இதில் யாரும் காயமடையவில்லை என்று அந்தக் கப்பலை இயக்கி வரும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போா் தொடங்கியதிலிருந்து, யேமனையொட்டிய கடல் பகுதியில் வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இருந்தாலும், தற்போது தாக்கப்பட்டுள்ள கப்பலுக்கு இஸ்ரேலுடன் தொடா்பில்லை என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற தாக்குதல்களால் ராணுவரீதியில் எந்தப் பலனும் இல்லை என்றாலும், யேமனில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக கிளா்ச்சியாளா்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது.
ரூ.15,000 வரை கடன் வழங்கும் கூகுள் பே..! எளிதாக பெறுவது எப்படி?