அடுத்த மாதம் (டிசம்பர்) முழுவதும் பணம் கொடுப்பதற்கு பதில் யுபிஐ பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதன் அனுபவங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் ‛மான் கீ பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் நாட்டின் வளர்ச்சி பற்றி பேசும் பிரதமர் மோடி சேவைகளில் ஈடுபடும் நபர்களை பாராட்டியும் வருகிறார். இந்நிலையில் தான் மான் கீ பாத்தின் 107 வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த வேளையில் அவர் டிஜிட்டல் இந்தியா குறித்தும் யூபிஐ பணப்பரிவர்த்தனை பற்றியும் பேசினார். அப்போது வரும் டிசம்பர் மாதம் முழுவதும் யூபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவில் யுபிஐ மூலம் நடக்கும் பணபரிவர்த்தனை என்பது கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளது. இது வரும் மாதத்தில் அதிகரிக்க வேண்டும். இதனால் வரும் (டிசம்பர்) மாதம் முழுவதும் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் யூபிஐ-யை பயன்படுத்த வேண்டும். அதில் கிடைக்கும் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் தொடர்ந்து 2வது முறையாக தீபாவளியின்போது மக்கள் கைகளில் பணம் வைத்து செலவழிப்பதை குறைத்து யுபிஐ பணபரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் மக்கள் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகளவில் நம்பி இருப்பது உறுதியாகி உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ஒரு மாதம் முழுவதும் யூபிஐ தவிர வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும்’’ என்றார்.
ஒரு ரயில் டிக்கெட் போதும்.. இந்தியா முழுவதும் 56 நாட்கள் ரயிலில் பயணிக்கலாம்..