பங்குச் சந்தை குறித்து பெரிய புரிதல் இல்லாதவர்கள் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது சிறந்தது என்று கூறப்படுகிறது
ஏனென்றால் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் திரட்டிய பணத்தை, நிபுணர்கள் மூலம் பங்குகளை நன்கு ஆய்வு செய்து சிறந்த பங்குகளில் முதலீடு செய்கின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் குறைவு. நல்ல லாபமும் கிடைக்கும்.
உதாரணமாக, 2023ம் ஆண்டில் பங்குச் சந்தைகள் 20 சதவீதம் வளர்ச்சி கண்டது. அதேசமயம் சில பல பங்குச் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு 38 முதல் 47 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளன. கடந்த ஓராண்டில் அதிக ஆதாயம் தந்த பங்குச் சார்ந்த டாப் 10 ஈக்விட்டி மியூச்சுவல் பண்டு திட்டங்கள் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகள்
மேற்கண்ட டாப் 10 ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளில் வேல்யூ மியூச்சுவல் பண்டுகள் 40 முதல் 47 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளன. உதாரணமாக, JM Value Fund,Nippon India Value Fund,Aditya Birla Sun Life Pure Value Fund,Axis Value Fund ஆகிய பண்டுகள் முதலீட்டாளர்களின் பணத்தை 40 முதல் 47 சதவீதம் அதிகரித்துள்ளன. அதேசமயம் இதே காலத்தில் சில மல்டி கேப் பண்டுகள் 38 சதவீதம் முதல் 40 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளன. HDFC Multi Cap Fund, Kotak Multicap Fund,ITI Multi Cap Fund,Nippon India Multi Cap Fund ஆகிய பண்டுகள் 38 முதல் 40 சதவீதம் வரை ஆதாயம் கொடுத்துள்ளன
அதேசமயம், ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை சுற்றியுள்ள அல்லது அதனுடன் ஒன்றிணைக்கப்பட்ட துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் thematic mutual funds சிறந்த வருமானத்தை வழங்கியுள்ளன. உதாரணமாக உள்கட்டமைப்பு thematic mutual fund, சிமெண்ட், பவர், ஸ்டீல் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும். thematic mutual funds கடந்த ஆண்டில் 59 சதவீதம் வரை ஆதாயம் அளித்துள்ளன. thematic மியூச்சுவல் பண்டுகள் – ஓராண்டில் அளித்த ஆதாயம்