பள்ளி மற்றும் கல்லூரி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் எவ்வாறு புதிய சான்றிதழை பெறுவது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி சான்றிதழ் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் வேலை, கடன் உதவி என அனைத்து முக்கிய தேவைகளுக்கும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக இந்த முக்கிய சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை இழக்க நேரிட்டலோ எப்படி புதிதாக சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என்பதற்கான முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதில், முதற்கட்டமாக சான்றிதழ்கள் எப்படி எங்கு தொலைந்தது என்கிற முழு விவரத்தினை போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும்.
www.eservices.tnpolice.gov.in என்கிற இணையதள முகவரியின் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொலைந்து போன இடத்தில் சான்றிதழ் குறித்து விசாரணை நடத்துவர்.
இதன் பின்னரும் சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில் நான் டிரேசபில் என்கிற சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அவசர சூழ்நிலைக்காக இந்த சான்றிதழ்களை பயன்படுத்தலாம் எனவும் ஆனால் நேர்காணல் வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு இந்த சான்றிதழை பயன்படுத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் பின்னர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் குறித்து புகார் அளிக்க வேண்டும்.
இதன் பின்னர் சான்றிதழில் இருக்கும் முக்கிய விவரங்களை கூறிய பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து தொலைந்து போன ஆவணங்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
பின்னர், குறிப்பிட்ட சில நாட்களுக்குள்ளாகவே தொலைந்து போன சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
Click Here to Join: