சென்னை: சமீபத்தில் பிறப்பு சான்றிதழ் அடையாள ஆவணமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கிராம பஞ்சாயத்துகளில் பதிவுசெய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று இங்கே பார்க்கலாம்.
- சமீபத்தில் பிறப்பு சான்றிதழ் அடையாள ஆவணமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
- இந்த நிலையில் கிராம பஞ்சாயத்துகளில் பதிவுசெய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று இங்கே பார்க்கலாம்.
- அடையாள அட்டைக்காக கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பிறப்பு சான்றிதழ்களை மக்கள் எளிதாக டவுன் லோடு செய்ய முடியும்.
- இதற்காக தமிழ்நாடு அரசு https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp என்ற இணைய பக்கத்தை வெளியிட்டு உள்ளது.
- இதில் உள்ளே சென்றதும் பர்த் சர்டிபிகேட் என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
- பொதுவாக குழந்தை பிறந்த மருத்துவமனையில் RCHID என்ற பதிவெண்ணை கொடுப்பார்கள்.
- மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்ததற்கான அடையாளமாக RCHID என்ற சீரியல் நம்பர் கொடுப்பார்கள்.
- இந்த நம்பரை அந்த பக்கத்தில் பதிவிட வேண்டும். இதை தொடர்ந்து அதே பக்கத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை கொடுக்க வேண்டும்.
- இது போக.. பாலினம், வயது , ஊர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும் .
- இதை பதிவு செய்ததும் கீழே உள்ள பிறப்பு சான்றிதழ் காட்டப்படும். இந்த பிறப்பு சான்றிதழை கிளிக் செய்து உடனே டவுன் லோடு செய்ய முடியும்.
அடையாள ஆவணம்:
- இந்த நிலையில்தான் நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ்.
- அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
எதற்கெல்லாம் பயன்படும்:
- மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.
- இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.
- பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது.
- இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன.
- அந்த ,மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது.
- இந்த சட்டம் மூலம் இனி பிறப்பு சான்றிதழை முக்கியமான ஆவணமாக பயன்படுத்த முடியும்.
- இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும்.
- ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும்.
- இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை.
- இப்போது பெறுவதன் மூலம் டிஜிட்டல் பதிவு மூலம் பொது சேவைகள் மற்றும் சமூக நல திட்டங்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் பெற்றிட முடியும்.
- இந்த சட்டம் அமலுக்கு வருவதால் இனி பல சேவைகளில் இதை அடையாள அட்டையாக, ஒரு முக்கிய ஆவணமாக வழங்க முடியும்.
- ரேஷன் அட்டையை போல இதையும் இருப்பிற்கான அடையாளமாக பயன்படுத்த முடியும்.
- ஆனாலும் பல இடங்களில் ஆதார் கேட்கப்படுவதால் இந்த அட்டை எந்த அளவிற்கு உதவும் என்று தெரியவில்லை.
- அதே சமயம் கல்லூரி சேருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த அட்டை உதவியாக இருக்கும்.