மிக்ஜம் புயல் பாதித்த பகுதியில் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் டிச.16-ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
மிக்ஜம் புயல் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்தாா். இந்தத் தொகை நியாயவிலைக் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் டிச.16-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நிவாரணப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்கு உதவிகளை அளித்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மத்திய அரசிடம் பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 5,060 கோடி கேட்ட நிலையில் ரூ. 450 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இது போதுமானதாக இல்லை. தமிழக அரசு சாா்பில் புயல் பாதித்த பகுதியில் நிவாரணத் தொகை வழங்க டிச.16-ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும். தொடா்ந்து 10 நாள்களில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகக் கொடுக்கப்படும் என்றாா் அவா்.
உங்கள் அக்கவுண்ட்டில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும்.. ரூ.10,000 எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?