பொங்கல் பண்டிகையை ஒட்டி 6,300 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் அறிவிப்பு!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பொங்கல் பண்டிகையை ஒட்டி மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்தான தகவல்களை பகிர்ந்துகொண்டார். 

பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லும் வகையில் ஜனவரி 12ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை 6,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் 19,487 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறினார்.

அதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் போக்குவரத்து இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், பண்டிகை காலத்தை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலித்தால், புகார்களை தெரிவிக்க சிறப்பு எண்களை அறிவித்தார்.

1800 425 6151, 044 – 2474 9002, 2628 0445, 2628 1611 என்ற எண்களை தொடர்புகொண்டு ஆம்னி பேருந்து கூடுதல் கட்டண புகார்களை தெரிவிக்கலாம்.

இந்நிலையில், நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போக்குவரத்தி தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ள நிலையில், அறிவித்தபடி பேருந்துகள் இயக்கப்படுமா? என பொதுமக்கள் மத்தியில் குழபம் நிலவுகிறது.

இந்நிலையில், அரசியல் காரணங்களுக்காக சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை  அறிவித்துள்ளதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே வேலைநிறுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments