நேற்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பு அதிகாரிகள் நம்மிடம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கலைஞர் உரிமை தொகை திட்டம் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. நேற்று புதிதாக இணைக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது
கடந்த மாதம் வரை 1.15 கோடி பேர், மகளிர் உரிமைத்தொகை பெற்றனர்; தற்போது மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை தரப்பட்டுள்ளது. மேலும் விரிவாக்கம்: இதை மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பிடம் விசாரித்த போது, இனி அடுத்த வருடம் மீண்டும் இந்த திட்டம் விரிவாக்கப்படும். அப்போது புதிதாக திருமணம் ஆனவர்கள், அரசு பணியில் இருந்து காலமான ஆண்களின் மனைவிகள் வரும் வருடங்களில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் புதிய பயனாளிகள் கண்டிப்பாக இணைக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. திட்டத்தின் நோக்கம்: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும். இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.