தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ரூ.1000 ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த உதவித்தொகைக்காக விண்ணப்பித்தவர்களில் பலரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே மீண்டும் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிப்பு வெளியானது. அதன்படி 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். இவர்களுக்கு நேற்று முதல் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது.
அதன்படி இன்னும் மேல்முறையீட்டில் தகுதியான நபர்களுக்கு முதற்கட்டமாக ஒரு ரூபாய் அனுப்பி சோதனையும் செய்யப்பட்டு வருகிறது. இதில் நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதன் மேல்முறையீட்டில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி முதல் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.