மகளிர் உரிமை தொகை ரூ.1000 உங்களுக்கு வரவில்லையா? என்ன செய்யவேண்டும்?

மகளிர் உரிமை தொகை மானியம் மற்றும் அதற்கான update எதுவும் உங்கள் Phone க்கு வரவில்லையா?

மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு இம்மாதம் 18 ஆம் தேதி முதல் எஸ்.எம்.எஸ். வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும்,  05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது  கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும்,  விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள்  பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

மேற்கூறிய படி அரசு உதவி தொகை மானியம் ரூ.1000

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு நேற்றே (14.09.23) ரூ. 1000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்புமின்றி, தங்கள் வங்கி கணக்குகள் ₹ 1000 வரவு வைக்கப்பட்டதால் பெண் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தைஉயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.  அண்ணா பிறந்த நாளான (செப்.15-ம் தேதி), அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

இந்நிலையில் சில குடும்ப தலைவிகளுக்கு உதவி தொகை வராத நிலையில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது

உதவி தொகை கிட்டாதவர்களுக்கு 18.09.23 முதல் SMS அனுப்பப்படும் அதன் காரணத்தை அறிந்துக்கொண்டு உதவி தொகை பெறாதவர்கள் இ சேவை மூலம் மேல் முறையீடு செய்யலாம்

இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.

புகார்கள் வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments