பாலிசிதாரர் இனி அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சையை தொடரும்படியான இன்சூரன்ஸ் பாலிசி திட்டத்தில் விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இன்சுரன்ஸ் பாலிசி:
இந்தியாவில் அவ்வப்போது மருத்துவ காப்பீட்டு நடைமுறைகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே பணம் இல்லாத சிகிச்சையை பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பாலிசிதாரர் தான் சிகிச்சைக்கான முழு தொகையையும் செலுத்த வேண்டும்.
அதன் பின்னர், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பில் தொகையை ஒப்படைத்து அதற்கான தொகையை கிளைம் செய்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில், தற்போது ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் மூலமாக கேஷ்லெஸ் எவ்வரிவேர் என்னும் பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலமாக அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ காப்பீடு திட்டம் மூலமாக பணமில்லா சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், இதற்கு இரண்டு நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பாலிசிதாரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன் பின்னர், உரிமைக்கோரல் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி இருந்தால் உங்களுக்கான முழு தொகையும் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்பட்டு விடும்.
இதன் மூலமாக நீங்கள் பணமில்லா சிகிச்சை முறையை தொடரலாம்.