மத்திய அரசு விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3000 பென்ஷன் தொகையாக வழங்கி வரும் நிலையில் அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் தொகை:
இந்தியாவில் உள்ள ஏழை, எளிய விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3000 பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இந்த திட்டத்தின் கீழ் இணையும் விவசாயிகள் இறக்கும் பட்சத்தில் விவசாயின் மனைவிக்கு ஓய்வூதியமாக ரூ.1500 வழங்கப்படுகிறது. தற்போது எப்படி பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் இணைவது என்பது குறித்தான விளக்கத்தை காணலாம்.
அதற்கு விவசாயிகள் கட்டாயமாக ஆதார் கார்டு, மொபைல் எண், பாஸ்போர்ட் புகைப்படம், அடையாள அட்டை, வயது சான்றிதழ், வருமான சான்றிதழ், நில ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் வைத்திருக்க வேண்டும். அதற்கு முதலில் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விவசாயிகள் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களது மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணை பதிவு செய்து அதில் கேட்கப்படும் செயல்முறைகளை முடித்து சப்மிட் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைய உங்களுக்கு தகுதி இருப்பின் மாதந்தோறும் ரூ. 3000 பென்ஷன் வழங்கப்படும்.