நுகர்வோருக்கான புது சேவை மின்கட்டணங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் கூடுதல் மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தும் நிலை உள்ளது.

பொது சேவை மின்கட்டணம்:
- தமிழக அரசின் மின்வாரியம் கடந்த கடந்த ஆண்டு நுகர்வோருக்கான பொது சேவை மின்கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்தது.
- இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிப்ட், மோட்டார் பம்பு போன்ற பொது சேவைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 8 மற்றும் மாதாந்திர நிரந்தர கட்டணம் கிலோவாட்டிற்கு ரூபாய் 100 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- இதன் மூலமாக மாநிலம் முழுவதும் பத்து லட்சம் பொதுசேவை மின் இணைப்புகளுக்கு புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டது.
- தொடர்ந்து நடப்பு ஆண்டு ஜூலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பொது சேவை பிரிவுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 8.15, நிரந்தர கட்டணம் ரூபாய் 102 ஆகவும் உயர்த்தப்பட்டது.
- இது தொடர்பாக பல்வேறு தரப்பு மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
- இதனால் தமிழக மின்வாரியம் நவம்பர் 1ஆம் தேதி முதல் பொது சேவை பிரிவுகளுக்கான கட்டணத்தை மாற்றி உத்தரவிட்டது.
- பத்து அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொது சேவை பிரிவுக்கான கட்டணம் ஒரு யூனிட் ரூபாய் 5.50 ஆக குறைக்கப்பட்டது.
- இதற்கு ‘ஒன் இ’ என்ற கட்டணம் விகிதம் நியமனம் செய்யப்பட்டது. ‘ஒன் டி’ பிரிவில் மாற்றப்பட்ட மின் இணைப்புகளில் ஆய்வு செய்து ஒன்றிய மின் கட்டண விகிதத்தை மாற்றும் பணி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
- பலரும் இப் பணிகளை முடிக்காத நிலையில் நடப்பு மாதத்திற்கான மின் கட்டணத்தை பழைய உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
- எனவே அரசு இத்தொடர்பாக நுகர்வோருக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது.