three phase மின்சாரம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
வீடுகள், கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், ஒருமுனை, மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, மாநகரம், நகரங்களில், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், கிராமங்களில் மட்டும் மின்சாரம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. காரணம், கிராமங்களில் செல்லும் மின் வழித்தடங்களில், வீடு, கடைகள் போன்றவை மட்டுமின்றி, விவசாயத்திற்கும் வினியோகம் செய்யப்படுகிறது…
மின்சாரம்: விவசாயத்திற்கு கரண்ட் இலவசம் என்பதால், தினமும் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் என, மொத்தம் 12 மணி நேரம் மட்டும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.. மற்ற நேரங்களில், மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை.
இதன்காரணமாக, கிராமங்களில் மக்கள் பெருத்த சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது.. முக்கியமாக, மாவு ஆலைகள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இயந்திரங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றன.. இத்தனைக்கும் எல்லா தரப்பினரும் ஒரே மின் கட்டணத்தைதான் செலுத்துகிறார்கள். அப்படியிருந்தும்கூட, கிராம மின் வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மும்முனை மின்சாரம் வழங்குவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
தொழிற்சாலை: இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சேவியர் என்பவர் இதற்கு ஒரு காண முற்பட்டார்.. எனவே, தன்னுடைய தொழிற்சாலைக்கு, 24 மணி நேரமும் three phase மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த ஆணையம், மனுதாரர் தொழிற்சாலைக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.. அத்துடன் அனைத்து கிராமங்களுக்குமே, 24 மணி நேரமும் three phase மின்சார வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டபுள் மகிழ்ச்சி: விரைவில் வெயில் காலம் துவங்க உள்ள நிலையில், கரண்ட் பிரச்சனை வந்துவிடுமே என்று கலங்கி போயிருந்தனர் கிராம மக்கள். தற்போது ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த உத்தரவானது, மக்களுக்கு பெருத்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.