மின் கட்டணம் யூனிட்டிற்கு ரூ.8 -க்கு பதிலாக ரூ.5.50 ஆக குறைப்பு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அடுக்குமாடி குடியிருப்பு, பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுவதாக தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று வளர்ச்சிப் பணிகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்

மின்சாரக் கட்டணம் 15 மடங்கு அதிகரிப்பு!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் வீடுகளுக்கான மின்கட்டணம் தான், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு இணைப்புகளுக்கும் வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாதத்திற்கு 100 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், பொதுப்பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, வணிகப்பயன்பாட்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக சுமார் 10 மடங்கு அளவுக்கு உயர்த்திய அரசு, இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விட்டது. அதனால் பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் 15 மடங்கு அதிகரித்தது.

மாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே அளவு மின்சாரப் பயன்பாட்டுக்கு ரூ.1600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 15 மடங்கு அதிக உயர்வு ஆகும். இப்போது முதலமைச்சர் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பின்படி, இனி 150 அலகு பயன்பாட்டிற்கு ரூ. 1225 கட்டணம் செலுத்த வேண்டும். இது பழைய கட்டணத்தை விட 11 மடங்கு அதிகம் ஆகும். பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை 15 மடங்கு உயர்த்தி விட்டு, அதில் மிகக்குறைந்த அளவை மட்டும் குறைப்பது எந்த வகையில் நியாயம்? என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments