முதல்வர் காப்பீடு அட்டை.. டிசம்பர் 2 சிறப்பு முகாம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றினை, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது, இந்த திட்டமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிகிச்சை முறைகள்: தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சுமார் 1.44 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள்.

குறிப்பாக,

பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 52 பரிசோதனை முறைகளுக்கும், இந்த திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் இதுவரை வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.. மொத்தத்தில், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருமே, பயன் பெறத்தக்க வகையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.

காப்பீடு திட்டம்: இத்திட்டத்தின்படி ஒரு குடும்பம், ஒரு வருடத்துக்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்பது கூடுதல் அம்சமாக உள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்..

காரணம், பலர் கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டையையே இன்னமும் வைத்திருக்கிறார்கள்.. அந்த அட்டை இப்போது செயல்பாட்டில் உள்ளதா என்று ஆராய்ந்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்களும் கலந்துகொண்டு பயனடையலாம் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டிருந்தார்.

சிறப்பு முகாம்: ஆனால், நாளை 18ம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறதாம்.. எனவே, வருகிற டிசம்பர் 2-ம் தேதிக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பலன்பெறலாம் என்றம் சுகாதாரத் துறை தற்போது கேட்டுக் கொண்டிருக்கிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments