மேரா பில் மேரா அதிகார் திட்டம் என்றால் என்ன?
இது ஒரு மத்திய அரசின் ஒரு திட்டமாகும். இதில் நாம் சரியான முறையில் நாம் வாங்கும் Invoice upload செய்தால் அதற்கான பரிசு தொகையை மத்திய அரசு நமக்கு வழங்கும்.
பரிசு தொகையை பெற என்ன செய்ய வேண்டும்?
நாம் செலவழிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் Bill வாங்க வேண்டும் With GST உடன் அந்த பில்லை மேரா பில் மேரா அதிகார் (Mera Bill Mera Adhikaar) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் மத்த தகவரல்களை அதுவே சேமித்து கொள்ளும் அதன் பின் மாதம் தோறும் நடைபெறும் குலுக்கல் முறையில் உங்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும்
எந்தெந்த பில்களை சமர்பிக்கலாம்?
நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளானாலும் சினிமா டிக்கெட், பெட்ரோல், மளிகை பொருட்கள்,ஆடைகள் என அனைத்து பில்களையும் சமர்பிக்கலாம் ஆனால் அதில் GST இருக்க வேண்டும் ஒரு மாதத்திற்கு 25 பில்வரை சமர்பிக்க வேண்டும் ரூ.200 க்கு மேல் இருக்கும் அனைத்து பில்களையும் சமர்பிக்கலாம்
பரிசு தொகை எவ்வளவு
வெற்றியாளர்களுக்கு 10,000 முதல் 1 கோடி வரை பரிசு தொகை பெறுவார்கள்.
இத்திட்டத்தின் குறிக்கோள் என்ன?
மக்கள் அனைவரும் சரியான முறையில் GST கட்டுவதை ஊக்குவிப்பதும் நமது பில்களை கேட்டு பெறவேண்டும் என்பதை ஊக்குவிப்பதும் ஆகும்.
மேரா பில் மேரா அதிகார் திட்டம் ஆரம்பகட்டமாக தாத்ரா நகர் ஹவேலி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் மற்றும் டாமன் மற்றும் டையூவுடன் குஜராத், ஹரியானா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.