யார் இந்த முத்துராமலிங்க தேவர்?; இந்திய அரசியலை ஈர்த்த வரலாறு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தை சேர்ந்த உக்கிரப்பாண்டி தேவர், இந்திராணி தம்பதிக்கு கடந்த 30.10.1908ம் ஆண்டு மகனாக பிறந்தவர் தான் முத்துராமலிங்கத்தேவர். வீரம், விவேகம், நேர்மை ஆகியவற்றுடன் வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத் தேவரின் பெயரையே வைக்க வேண்டும் என்று உறவினர்கள் விரும்பியதால் அப்பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.

​பாட்டி அரவணைப்பில் தேவர்

முத்துராமலிங்க தேவர் 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது அவரது தாய் இந்திராணி இறந்துவிட்டார். இதனால் உக்கிரப்பாண்டி தேவர் 2வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் சிறிது காலத்தில் இறந்துவிட்டதால் மேலும் ஒரு பெண்ணை உக்கிரப்பாண்டி தேவர் மணமுடித்தார். இதனால் பாட்டி பார்வதியம்மாள் அரவணைப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுபட்டி என்கிற கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் வளர்ந்தார்.

அப்போது கமுதியை சேர்ந்த ஆயிஷா பேபி என்ற முஸ்லிம் பெண்ணிடம் முத்துராமலிங்க தேவர் பால் குடித்து வளர்ந்துள்ளார். இதனால் அந்த முஸ்லிம் பெண்ணை முத்துராமலிங்க தேவர் ஒருபோதும் மறந்தது இல்லை. முத்துராமலிங்க தேவர் தனது 6 வயதில் கல்வி வாழ்க்கை தொடங்கினார். அந்த கால வழக்கத்தின்படி குருகுல வாழ்க்கையை கல்வியாக திண்ணைப்படிப்பு தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஆசிரியரிடம் கற்றார்.

முத்துராமலிங்க தேவர் கல்வி

இதன் பிறகு 1917ம் ஆண்டு கமுதியில் இருந்த அமெரிக்க மிஷன் ஆரம்ப பள்ளியில் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் கல்வி பயின்று வந்தார். கடந்த 1924ம் ஆண்டு 5ம் வகுப்பை முடித்த முத்துராமலிங்க தேவர் மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ஐக்கிய கிறிஸ்தவ பள்ளியில் உயர்நிலை கல்வி பயின்றார். இந்நிலையில் கடந்த 1927ம் ஆண்டு குடும்ப சொத்து வழக்கு தொடர்பாக பிரபல காங்கிரஸ் பிரமுகரும், முன்னணி வழக்கறிஞருமான சீனிவாசனை சந்திக்க முத்துராமலிங்க தேவர் சென்னை சென்றார்.

அரசியலுக்கு அடித்தள கூட்டம்

அப்போது சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு முத்துராமலிங்க தேவரை அழைத்துச்சென்ற வக்கீல் சீனிவாசன் சிறப்பு பார்வையாளர் பகுதியில் அமர வைத்ததால் சுபாஷ் சந்திரபோசின் உணர்ச்சிமிகு உரையை கேட்டு, விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொள்ள முத்துராமலிங்க தேவர் தீர்மானித்தார்.

தேவரை ஈர்த்த காங்கிரஸ் கட்சி

அன்று முதல் விலை உயர்ந்த ஆடைகளை உடுத்துவதை நிறுத்திக்கொண்ட முத்துராமலிங்க தேவர் தூய்மையான கதர் ஆடைகளை விரும்பி அணிய தொடங்கி முழு காங்கிரஸ்காரராக தன்னை மாற்றிக்கொண்டார். வழக்கறிஞர் சீனிவாசன் இல்லத்தில் தங்கி இருந்தபோது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தேசிய உணர்வை கண்டு மகிழ்ந்தார் நேதாஜி.

இந்நிலையில் 1935/36ல் நடந்த தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார் காந்திஜி. அவரை எதிர்த்து நேதாஜி போட்டியிட்டார். இதனால் நேதாஜிக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் களத்தில் இறங்கியதால் தேர்தலில் வெற்றி பெற்றார். காங்கிரசின் பல கொள்கைகளில் முரன் கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தபடியே ‘அகில இந்திய பாா்வா்டு பிளாக்’ என்ற இயக்கத்தை தொடங்கினார்.

நேதாஜி வெற்றிக்காக வேலை

இந்நிலையில் 1935/36ல் நடந்த தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார் காந்திஜி. அவரை எதிர்த்து நேதாஜி போட்டியிட்டார். இதனால் நேதாஜிக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் களத்தில் இறங்கியதால் தேர்தலில் வெற்றி பெற்றார். காங்கிரசின் பல கொள்கைகளில் முரன் கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தபடியே ‘அகில இந்திய பாா்வா்டு பிளாக்’ என்ற இயக்கத்தை தொடங்கினார்.

இந்திய அரசியலில் சாதனை

அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியில் பணியாற்ற தொடங்கிய முத்துராமலிங்க தேவர் தொடர்ந்து 3 முறை மக்களவைக்கு தேர்வானாா். இந்திய அரசியலில் பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் 3 முறை (1952, 1957, 1962) மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மட்டுமே என்பதுதான் இன்று வரை வரலாறாக உள்ளது.

டந்த 1954ம் ஆண்டு மொழி வாரி மாநில பிரிவினையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தை ராஜாஜி அரசு பலவந்தமாக அடக்கியது. அப்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரை ஒரு வழக்கில் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்தபோது சிறு வயதில் பாலூட்டி வளர்த்த ஆயிஷா பேபி காலமாகிவிட்டார்.

முஸ்லீம் வேடமணிந்த தேவர்

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு முத்துராமலிங்க தேவர் எப்படியும் வருவார் என்பதால், அவரை கைது செய்ய புலனாய்வு போலீசார் கமுதியை முற்றுகையிட்டு காத்திருந்தனர். அப்போது இஸ்லாமிய பெரியவர் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவர் ஆயிஷா பேபி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அடுத்த கணமே காணாமல் போய்விட்டார். அந்த பெரியவர் முத்துராமலிங்க தேவர் என்பது பிறகு தான் தெரிய வந்தது.

​முத்துராமலிங்க தேவர் மரணம்

கடந்த 1962ம் ஆண்டு தேர்தலில் முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்றும் உடல்நல குறைவு காரணமாக அவரால் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது. எனவே, மதுரை திருநகரில் தங்கி ஓய்வும், சிகிச்சையும் பெற்று வந்த முத்துராமலிங்க தேவர்1963ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மரணமடைந்தார். அவர் மரணத்திற்கு பின்னர், தனது உடலை சொந்த ஊரான பசும்பொன்னில் அடக்கம் செய்ய வேண்டும் என, கூறி இருந்ததால் 30ம் தேதி பசும்பொன்னில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முக்கிய நிகழ்வானது ஜெயந்தி

இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30ம் தேதி அன்று ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தென்தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நாளடைவில் தமிழக அரசியலை தாண்டி இந்திய அரசியலில் முக்கிய நிகழ்வாகவே மாறிப்போனது.

கருணாநிதி பிள்ளையார் சுழி

இதற்கு பிள்ளையார் சுழி போட்டது கருணாநிதி. கடந்த 1969ம் ஆண்டு குடியரசு தலைவா் தேர்தலில் வி.வி.கிரி வெற்றி பெற்று தேசிய அரசியலில் இந்திரா காந்தியின் கை ஓங்கியபோது கோரிப்பாளையத்தில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் ஒத்துழைப்புடன் தேவருக்கு பெரிய சிலையை மூக்கையாத் தேவர் அமைத்தார்.

இதையடுத்து வி.வி.கிரியை அழைத்து தனது முன்னிலையில் தேவா் சிலையை திறந்துவைத்து தேவா் ஜெயந்தி கலாசாரத்தை உருவாக்கி முக்குலத்தோர் வாக்குகளை தனக்கு சாதகமாக திருப்ப முயன்றார் கருணாநிதி.

முக்குலத்தோரும்.. எம்ஜிஆரும்..

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முக்குலத்தோா் மக்கள் மத்தியில் திமுகவுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியப் பிறகு1977 பேரவை தேர்தல் முதல் டெல்டா பகுதி முக்குலத்து மக்கள் திமுகவுக்கு ஆதரவாகவும், தென்மாவட்ட முக்குலத்து மக்கள் அதிமுகவுக்கு ஆதரவாகவும் திரும்பினார்கள். இதே சூழல் தான் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா காலத்திலும் தொடா்ந்தது.

ஜெயலலிதா தந்த தங்கக்கவசம்

கடந்த 1991க்கு பிறகு அதிமுகவில் ஜெயலலிதாவின் தோழி என்கிற அடிப்படையில் சசிகலாவின் கை ஓங்கியதால் முக்குலத்து மக்கள் பெரும்பாலானோா் அதிமுகவுக்கு ஆதரவாக மாறினர். இதற்கு நன்றிக் கடனாகவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 2014ம் ஆண்டு 13 கிலோ தங்கக்கவசத்தை பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு வழங்கினார்.

Click Here to Join:

Telegram Group link 

YouTube link

Instagram link 

WhatsApp Channal Link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments