மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்திற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் சிற்பி, தச்சர், பொற்கொல்லர் உள்ளிட்ட 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெற இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
இந்த திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துமாறு பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்கான வயது வரம்பை 18ல் இருந்து 35 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் குலக்கல்வியை ஊக்குவிப்பது போல இருப்பதாக தெரிவித்து அரசு செயல்படுத்தாமல் இருக்கிறது.
மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ஒரு வாரம் பயிற்சி வழங்கப்படும்.
அதற்கு தினமும் ரூ. 500 வழங்கப்படும். மேலும் பயிற்சி முடிந்ததும் ரூ. 15,000 மதிப்புள்ள தொழில் கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.
இறுதியாக ரூ.1 லட்சம் கடன் 5சதவீத வட்டியுடன் வழங்கப்படும். அதை 18 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.