தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கியது. இது தொடர்பாக அப்போது வெளியிட்ட அறிக்கையில், “குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும், 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
அவ்வண்ணம் ரூ.1000 வராதவர்களுக்கு sms அனுப்பப்படும் அதில் என்ன காரணம் என குறிப்பிடப்படும் நீங்கள் அதற்கு மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் நீங்கள் E- சேவை மூலம் மேல் முறையீடு செய்யலாம் என கால அவகாசம் வழங்கப்பட்டது அவ்வண்ணம் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர் அதில் 5,021 பேருக்கு ரூ.1000 வழங்கப்பட்டது.
அவ்வாறு மேல்முறையீடு செய்தும் ரூ.1000 வராதவர்களுக்கு உங்களது மாவட்டத்தில் இருந்து உங்களுடைய செல்போனுக்கு அழைப்பு வரப்போகிறது. அதில் நீங்கள் இந்த காரணத்தால் தகுதி இல்லை என்று கூறுவார்கள். நீங்கள் அது உண்மை இல்லை என்று கருதினால், சரியான காரணத்தை அவர்களிடம் எடுத்துரைக்கலாம்.
ரூ. 1000 இது உதவி தொகை அல்ல உரிமை தொகை உங்கள் உரிமைக்கு குரல் கொடுங்கள்!!!
Click Here to Join: