ரூ.1000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு: இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, எந்த நிபந்தனையுமின்ற அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகளின் மூலம் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டும் பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழ்நாட்டில் அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
கண்ணீர் வர வைக்கும் கட்டண உயர்வு; மிரள வைக்கும் ஆம்னி பேருந்துகள்
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா! அடுத்த வாய்ப்பு யாருக்கு?
தொடக்கத்தில் அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனையின்றி அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஒன்றாம் தேதி பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ வெல்லம், முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில், சுமார் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.35.20 விலையில் ஒரு கிலோ அரிசியும், ரூ. 40.61 செலவில் ஒரு கிலோ வெல்லமும், ரூ.33 செலவில் ஒரு கரும்பும் கொள்முதல் செய்ய ரூ.238.92 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் பொங்கல் பரிசுகளுடன் சேர்த்து இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி நிறைவு பெற்ற நிலையில், இன்று முதல் பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்க உள்ளது. அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments