அளவுக்கு அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும், சாதாரண் வந்தே பாரத் எப்போது பயன்பாட்டுக்கு வரப்போகிறது என்பது குறித்த இன்னொரு சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.
பல நவீன வசதிகளை கொண்ட வந்தே பாரத் நாட்டு மக்களை ஈர்த்து வருகிறது.. தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை – நெல்லை இடையேயான வழித்தடங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே 25-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வே: தென்னகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களே, அனைத்து விதமான பயணிகளின் விருப்ப தேர்வாக உள்ளது நேற்றைய தினம் கூட, தெற்கு ரயில்வே தகவல் பெருமிதம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது
தற்போது, பொதுமக்களின் கவனம், வந்தே சதரன் என்று சொல்லப்படும் சாதாரண வந்தே பாரத் ரயில் மீது திரும்பியிருக்கிறது.. சாதாரண பெட்டிகளை கொண்ட “வந்தே சதரன்” ரயில்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.. கடந்த ஆகஸ்ட்டில் இதற்கான பணிகள் துவங்கியது.. மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில், இதற்கான இன்ஜின்களும் தயாரிக்கப்பட்டன. பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 என்ஜின்கள் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன.
மாற்றங்கள்: ஏற்கனவே உள்ள வந்தே பாரத் ரயிலிலேயே ஒருசில மாற்றங்களை செய்து, இந்த ரயில் தயாராகிறது. அநேகமாக இந்த மாத இறுதிக்குள் வந்தே சதரன் ரெயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சாதாரண் வந்தே பாரத் ரயில் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, சாதாரண் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், முதல் ரயிலும் ரெடியாகிவிட்டது.. உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள ஆர்டிஎஸ்ஓ எனப்படும், ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம். சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே மணிக்கு, 130 கி.மீ. வேகத்தில் இயக்கி, இந்த சாதாரண் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டம்: 130 கிமீட்டர் வேகத்துக்கு இந்த ரயிலை இயக்கி, இந்த ரயிலின் வேகம், ரயில் பாதை திறன் மற்றும் சிக்னல் தொழில்நுட்பம், கிமீ கடக்கும் நேரம், ரயில் நிலையங்களில் நடைமேடைகளை கடந்து செல்வது குறித்து ரயில்வே அதிகாரிகள் கணக்கீடு செய்திருக்கிறார்கள்.. மேலும் நாளைய தினம், ரயில்வே வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்த போகிறார்கள்.. அதற்கு பிறகுதான், எந்த மார்க்கத்திலிருந்து, சாதாரண் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்ற விவரங்களை சொல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இந்த மாத இறுதியில், இந்த ரயிலை அறிமுகப்படுத்த, ரயில்வே திட்டமிட்டுள்ளதால், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.
சிறப்புகள்: இந்த சாதாரண் ரயிலில், ஏசி வசதி கிடையாது.. சாதாரண் பெட்டிகள்தான் இருக்கும்.. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளை கொண்டது.. சுமார் 1800 பயணிகள் இதில் பயணிக்க முடியும்… படுக்கை வசதிகளுடன் விளக்குகளும், ஃபேன்கள், சுவிட்சுகள், பேனல்கள், எல்இடி விளக்குகள் நவீன வடிவில் பொருத்தப்பட்டுள்ளன.. ஒவ்வொரு சீட்டிற்கும் செல்போன் சார்ஜர் வசதி உண்டு..சுழலும் இருக்கை வசதிகள் முக்கியமாக, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் இருக்கிறதாம். எல்எச்பி பெட்டிகளுடன் இருபுறமும் மின்சார என்ஜின்கொண்டு இயங்கும். எந்த ஒரு நிலையிலும் ரயிலை பின்னோக்கி இயக்க தேவையில்லை. 2 முனைகளிலும் இன்ஜின்கள் இருக்கும்.
எதிர்பார்ப்பு: ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரந்தர கப்ளர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், பெட்டிகள் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு இருக்காது.. ரயில் நிற்கும்போது ஏற்படும் அதிர்வுகளை பயணிகள் உணர முடியாது.. மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது என்பதால், இந்த ரயில் மீதான எதிர்பார்ப்பு கூடியபடியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ஐசிஎப் மேலாளர் மல்லையா செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார். அப்போது, சாதாரண் வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்தபடியாக வந்தே மெட்ரோ ரயிலை தயாரிக்க உள்ளதாக கூறியிருந்தார்.
வந்தே மெட்ரோ: இந்த ரயிலானது குறைந்தபட்ச தூரத்தில் இயக்கப்படுமாம்… அதாவது,சென்னை-செங்கல்பட்டு, சென்னை-காட்பாடி இது போன்று குறைவான தூரத்தில் இயக்கப்படும் என்றும், இந்த வந்தே மெட்ரோவானது முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட ரயிலாக இருக்கும், இந்த ரயிலில் ஒரு பெட்டியில் 300 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும் என்றும் கூறியிருந்தார். அந்தவகையில், தமிழகத்துக்கு, வந்தே மெட்ரோ குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
Click Here to Join: