ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும்.. ராதாகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4) தரங்கம்பாடி அருகே கிடாரங்கொண்டான், கீழையூர் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அப்பொழுது ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பாக ஓர் முக்கிய கருத்தை கூறிஉள்ளார். அதில், ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் (டிபிசி), வேளாண்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், கூட்டுறவுத்துறை விவசாயிகளின் பாலமாகச் செயல்படும் எனத் தெரிவித்தார்.
Click Here to Join: