You are currently viewing வருவாய்த்துறையில் போலி பணி நியமன ஆவணங்களை காட்டி பணி பறிக்கும் கும்பல்!

வருவாய்த்துறையில் போலி பணி நியமன ஆவணங்களை காட்டி பணி பறிக்கும் கும்பல்!


  • காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய்த்துறையில் வேலை வாங்கித் தருவதாககூறி போலி பணி நியமன ஆணைகளை காட்டி, பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
  • தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவியாளர் காலிப் பணியிடங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே நிரப்பிக் கொள்ளலாம் என தகவல் பரவியது.
  • ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
  • இந்நிலையில், இந்த தகவலை பயன்படுத்தி சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலும், கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய்த்துறையில் அலுவல உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமனஆணைகளை அடித்து பண மோசடியில் கும்பல் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
  • பணி நியமன ஆணையில், தலைமை ஆணையாளர் கடிதம் அனுப்புவது போலவும், வருவாய்த்துறை அலுவலகத்தில்,அலுவலக உதவியாளர் பணி எனவும் பணியில் சேரும் நாள் அக்.17 எனவும், சம்பளம் ரூ. 25 ஆயிரத்து 300 எனவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தவிர பணி நியமன ஆணையில், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு காட்டி முன் பணமாக ரூ.10 ஆயிரம் வாங்கிய சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
  • மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இதனை நம்பி பணம் கொடுத்து பலர் ஏமாந்து வருகின்றனர்.
  • இதுகுறித்து, மாவட்ட கலெக்டரும், மாவட்ட போலிசாரும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதோடு மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments