விளையாட்டு வீர்களுக்கு அரசு வேலையில் 3% இடஒதுக்கீடு!

3% இட ஒதுக்கீடு விளையாட்டு துறைக்கென ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள்/பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் யாருக்கெல்லாம் வேலை கிடைக்கும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் / திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப்போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும்.

சர்வதேச போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் / பங்கேற்றவர்கள்) கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுபோட்டிகள் ஆசிய விளையாட்டுப்போட்டிகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் போட்டிகள் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு

சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள். விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும் ) தேசிய விளையாட்டுப்போட்டிகள், அமைச்சகத்தால் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப்போட்டிகள்\\ மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும் )

வயது வரம்பு: விளையாட்டு வீரர்கள் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து குறைந்தபட்ச கல்வித் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின்படி 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் Www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் விண்ணப்பத்தினை இணையதள முகவரியில் உரிய இணைப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் 31.10.2023-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments