விவசாயிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பென்ஷன் திட்டம் குறித்து தெரியுமா? வருடதுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் தொகை எவ்வளவு? தெரியுமா?
விவசாயிகளின் நன்மைக்காகவும், அவர்களின் வளமான வாழ்வுக்காகவும் மத்திய அரசு எத்தனையோ சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
எனினும், விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.. எதிர்காலத்தில் எந்த வருமானமும் இன்றி தவிக்கும் சூழலுக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.
கிசான் மந்தன் யோஜனா:
அதனால்தான், இதற்கும் ஒரு தீர்வை தந்துள்ளது மத்திய அரசு. விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, சிறு மற்றும் குறு விவசாயிகளின் எதிர்கால தேவைகளையும் புரிந்து கொண்டு, இதற்கு ஓரளவிற்கு நிவர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா.
விவசாயிகளின் நன்மைக்காகவும், அவர்களின் வளமான வாழ்வுக்காகவும் மத்திய அரசு எத்தனையோ சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
எனினும், விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.. எதிர்காலத்தில் எந்த வருமானமும் இன்றி தவிக்கும் சூழலுக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.
கிசான் மந்தன் யோஜனா: அதனால்தான், இதற்கும் ஒரு தீர்வை தந்துள்ளது மத்திய அரசு.
விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, சிறு மற்றும் குறு விவசாயிகளின் எதிர்கால தேவைகளையும் புரிந்து கொண்டு, இதற்கு ஓரளவிற்கு நிவர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா.
இந்த திட்டத்தில், மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.. மாதம் 3000 ஆயிரம் என்றால், வருடத்துக்கு 36000 ரூபாய்… இந்த பென்ஷனை பெற வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
பிரீமியம் தொகை:
இந்த திட்டத்தில், 18 வயதில் சேர்ந்தால் ரூ.55 பிரீமியம் தொகையும், 30 வயதில் சேர்ந்தால் ரூ.110, 40 வயதில் சேர்ந்தால் ரூ.200 என பிரீமியமும் செலுத்த வேண்டும்.
ஆனால், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. அதேபோல, 2 ஹக்டேர் அதாவது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் விவசாயிகள், உள்பட 18 வயது முதல் 40 வயதில் உள்ள எல்லாருமே இந்த பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் இணையலாம்.
இதற்கு விவசாயிகள் தங்களது 60 வயது வரை பிரீமியம் செலுத்த வேண்டும்.
60 வருடம் நிறைவடைந்த பிறகு, மத்திய அரசிடம் இருந்து மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறப்படும்.. ஓய்வூதியம் பெறும் விவசாயி இறந்துவிட்டால், அரசு 50 சதவீத குடும்ப ஓய்வூதியத்தை அவரது மனைவிக்கு வழங்குகிறது.
மனைவிக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்றால், அதுவரை செலுத்திய தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
பாலிசி:
அதாவது, வாழ்க்கை துணைவர் 50% குடும்ப ஓய்வூதியத்தை பெற்றால், மனைவி இறந்தவுடன் நாமினி பணம் பெறுவார்.
பாலிசியின்போது விவசாயி இறந்தால், மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி அவரது மனைவி ஓய்வூதியம் பெறலாம்.\
அதேபோல, சில வருடங்கள் பிரீமியம் கட்டியபிறகு, இந்த திட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், செலுத்திய முழுத்தொகையையும் வட்டியுடன் சேர்த்து அரசு திருப்பி தந்துவிடும்.
உங்களுக்கு அருகிலிருக்கும் பொது சேவை மையத்திற்கு சென்று, பி.எம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கு, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் உள்ளிட்ட நகல்களை கட்டாயம் தேவை.. வருமான சான்றிதழ், நில உரிமையை உறுதி செய்யும் பட்டா, வயது சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் கைகளில் வைத்து கொள்ள வேண்டும்.
சான்றிதழ்கள்:
அதேபோல, ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் முனைவோருக்கான ஆரம்ப பங்களிப்பு தொகை பணமாக வழங்கப்படுவதற்கான சான்றிதழ்களையும் வைத்திருப்பது அவசியம்..!!!