வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தாதன் காரணம் என்ன?

  • தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் வங்கியின் மூலமாக வழங்கப்படாத காரணம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • ரூ.6000 நிவாரணம்:
  • தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் பலரும் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.
  • தற்போது வரையிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முழுவதுமாக வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
  • இந்நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 30 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6000 வழங்க இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • இது போக, ஆடு, மாடுகள் மற்றும் பயிர்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது.
  • இந்நிலையில், மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை மட்டும் வங்கி கணக்கில் வழங்கப்படும் நிலையில் நிவாரண தொகை ரேஷன் கார்டு மூலமாக ரொக்கமாக வழங்க திட்டமிட்டது ஏன் என்கிற கேள்வி எழுக்கப்பட்டுள்ளது.
  • அதாவது, வங்கியின் மூலமாக பணம் அனுப்பினால் மினிமம் பேலன்ஸ் இல்லாதவர்களின் கணக்கில் பணம் பிடிக்கப்பட்டுவிடும்.
  • இதனால், முழுமையாக நிவாரணத்தொகை பொதுமக்களை சென்றடையவே கையில் பணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments