10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மதுரை, உசிலம்பட்டி OSC-இல் செம ஜாப்.. மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம்

மதுரை உசிலம்பட்டியில் உள்ள ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ மையத்தில் 13 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்படும் பெண்களுக்கு கை கொடுக்கும் வகையில், மத்திய அரசின் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ என்ற திட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவு துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை உசிலம்பட்டியில் உள்ள ஒன் ஸ்டாப் செண்டர் திட்டத்தில் 13 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள்

மையத்தின் நிர்வாகி (01 பணியிடங்கள்), மூத்த ஆலோசகர் (01), ஐடி அட்மின் (01), Case Worker -06, உதவியாளர் -02, செக்யூரிட்டி 02 என மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

கல்வி தகுதி: மைய நிர்வாகி பணியிடத்திற்கு சட்டம்/ சமூக பணி, / சமூகவியல்/சமூக அறிவியல்/சைக்காலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் படித்து இருக்க வேண்டும். முன் அனுபவமும் அவசியம். Senior Counselor பணிக்கு டிகிரி அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மனநல மருத்துவம்/ நரம்பியல், உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலம். பணி அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். ஐடி அட்மின் பணிக்கு கணிணி சார்ந்த படிப்புகளில் பட்டம் அல்லது ஐடி முடித்து இருக்க வேண்டும். டேடா மேனேஜ்மண்ட், ஆவணப்படுத்துதல், இணைய வழி ரிபோர்ட் எடுத்தல் போன்ற பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் முன் அனுபவமும் அவசியம். பாதுகாவலர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கல்வி தகுதி, அனுபவம் குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம்

மைய நிர்வாகி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். சீனியர் ஆலோசகர் பணிக்கு மாதம் ரூ.20,000, ஐடி அட்மின் பணிக்கு ரூ.18,000 சம்பளமாக வழங்கப்படும். Case Worker பணிக்கு ரூ. 15,000 வழங்கப்படும். உதவியாளர் பணிக்கு ரூ.6,400ம் , செக்யூரிட்டி பணிக்கு ரூ.10,000 வழங்கப்படும். மதுரை சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 24 மணி நேரமும் மையம் செயல்படும் என்பதால் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும். விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். 10.11.2023 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai – 20.

தேர்வு அறிவுப்பு தொடர்பான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments