இந்தியாவில் மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் உங்களுடைய ஆதார் அட்டை வழங்கப்பட்டால் அதனை ஜூன் 14க்குள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்.
மக்களுக்கு தேவையான முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை இருக்கும் நிலையில், அதில் உங்களுடைய ஆவணங்களை புதுப்பிக்க UIDAI சிறப்பு அம்சம் ஒன்றை சேர்த்து இருக்கிறது.
அதாவது நீங்கள் Myaadhaar போர்ட்டல் அல்லது Myaadhaar என்ற செயலி மூலம் updatedocument ஆப்ஷனை பயன்படுத்தி நம் ஆவணங்களை புதுப்பித்து கொள்ளாலாம்.
நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆதார் பெற்று இருந்தால் அதனை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
மேலும் உங்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆதார் புதுப்பிக்க தெரியாமல் இருந்தால் அருகே உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களின் நகலை வழங்கி புதுப்பித்து கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் விவரங்களை ஜூன் 14 வரை இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.
இது மைஆதார் ‘myAadhaar’ எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும்.
ஆனால் ஆதார் மையங்களின் உதவி தேவைப்பட்டால் உங்களுக்கு வழக்கம் போல ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் https://myaadhaar.uidai.gov.in/ எனும் இணையத்தில் ஆதார் எண்னை பயன்படுத்தி உங்களுடைய விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம்.