மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் இதற்கு முன்பாகவே இந்த புதிய வீட்டுத் திட்டம் குறித்து பேசியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பல அம்சங்களை வெளியிட்டார். நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் புதிய வீட்டுத் திட்டம் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும், 2 கோடி வீடுகள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
தகுதியானவர்கள்: வாடகை வீடுகள், குடிசைகளில் வசிக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் இதற்கு தகுதியானவர்கள் என குறிப்பிட்டார்.
இந்த திட்டத்திற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன என்றும், இத்திட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் சம்பந்தப்பட்ட துறைகள் கவனித்து கொள்ளும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் இதற்கு முன்பாகவே இந்த புதிய வீட்டுத் திட்டம் குறித்து பேசியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதச் சலுகை பலன் கிடைக்கும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.