நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் ஆண்டுக்கொரு முறை குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும். சென்ற ஆண்டுக்கான (2022) விருதுகள் பட்டியலில் பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும் பத்ம பூஷண் 17 பேருக்கும் பத்ம ஸ்ரீ 107 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் பட்டியலில் ஒன்பது தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏழு பேர் தமிழக பட்டியலிலும் நடராஜன் சந்திரசேகரன் மகாராஷ்டிரா என்றும் சுந்தர் பிச்சை அமெரிக்கா என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

சிற்பி பாலசுப்பிரமணியம்:

பத்ம ஸ்ரீ விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியம், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். 1970களில் தீவிரமாக இயங்கிய வானம்பாடி கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர். ‘ஒரு கிராமத்து நதி’ என்கிற இவரது புத்தகக்துக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். இயற்கை வளம் செழித்த பொள்ளாச்சி இவரின் சொந்த ஊர்.
பல்லேஷ் பஜந்திரி:

பல்லேஷ் பஜந்திரி கஜல் பாடகர், செனாய் இசை கலைஞர். கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழத்தின் கலைமாமணி, கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட மாநிலங்களின் கலைக்கான உயரிய விருதுகளைப் பெற்றவர். ஹிந்துஸ்தானி இசையில் தன்னிரகற்று விளங்குபவருக்கு 2022 ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
எஸ்.தாமோதரன்:
கிராமாலயா என்ற சேவை நிறுவனத்தின் வழியாக கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் எஸ்.தாமோதரன் அவர்களுக்கு சமூக சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்
சௌகார் ஜானகி:

90 வயது நடிகர் சௌகார் ஜானகி 450 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 3000 க்கும் அதிகமான நாடகங்களில் நடித்தவர். தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலமாக பல்வேறு பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்த வருடத்திற்கான பத்மஸ்ரீ விருது பெற்றார்.
முத்துகண்ணம்மாள்:

திருச்சி விராலிமலையைச் சேர்ந்த சதிர் நடனக்கலைஞர், முத்துகண்ணமாள். அரை நூற்றாண்டு காலமாக சதிர் நடனக் கலைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவருக்கு பத்ம ஸ்ரீ விருது பெற்றார்
ஏ.கே.சி.நடராஜன்:

திருச்சியைச் சேர்ந்த 90 வயதான கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி நடராஜன் சென்னை மியூஸிகல் அகாடமியில் சங்கீத கலாநிதி என்ற பட்டம் பெற்றவர். திருச்சியைச் சேர்ந்த இவரின் நாதஸ்வரத்திற்கு கிடைத்திருக்கும் இன்னொரு மகுடம் பத்ம ஸ்ரீ விருது.
வீராச்சாமி சேஷய்யா:
பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் வீராச்சாமி சேஷய்யா, சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர். மருத்துவம் சார்ந்த இவரது பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இவர்கள் தவிர தமிழகத்தில் பிறந்து தற்போது வெளிநாட்டு குடியுரிமை பெற்று வசிக்கும் ஒருவருக்கும் மகாராஷ்டிராவில் வசிக்கும் ஒருவருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டது
நடராஜன் சந்திரசேகரன் (மகாராஷ்டிரா):

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ள நடராஜன் சந்திரசேகரனுக்கு வணிகத்தில் சிறந்து விளங்குவதற்காக பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தவர். கோவை பொறியியல் கல்லூரியில் இளங்கலை, திருச்சி நேஷனல் கல்லூரியில் முதுகலை படிப்புக்கு பிறகு 1987 இல் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர். கடின உழைப்பின் வழியாக டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் படிப்படியாக தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு உயர்ந்தவர்.
சுந்தர் பிச்சை (அமெரிக்கா):

தமிழகத்தில் பிறந்து உலகின் மிகப்பெரிய டெக் சாம்ராஜ்ஜியமான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் சுந்தர் பிச்சை பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார்.