2023இன் (Miss Universe Contest) பிரபஞ்ச அழகியாகப் முடி சூட்டப்பட்டுள்ளார், நிக்காராகுவா (Nicaragua) அழகி ஷெனிஸ் பாலகியொஸ் (Sheynnis Palacios).
மத்திய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவர் பிரபஞ்ச அழகிப் போட்டியை வெல்வது இதுவே முதல்முறை.
இவ்வாண்டு போட்டி எல் சல்வடோரில் (El Salvador) நடந்தது.
கேள்வி பதில் அங்கத்தில் குமாரி பாலகியொஸ் பாலின பேதமின்றி அனைவருக்கும் சமமான சம்பளம் கொடுப்பதன் முக்கியவத்துவத்தைப் பற்றிப் பேசினார்.
பெண்கள் சாதிக்க எல்லையை இல்லை என்றும் அவர் சொன்னார்.
போட்டியில் தாய்லந்து இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் வந்தன.
ஒரு வாரம் நீடித்த போட்டியில் 84 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த பிரபஞ்ச அழகிப் போட்டி மெக்சிகோவில் (Mexico) நடைபெறும்.
Click Here to Join: