2023 தேசிய விளையாட்டு விருதுகள்: முழு விவரம்

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் விவரங்கள் இன்று (டிச.20) மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. 

அதில் இந்தாண்டுக்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் ஆர்.வைஷாலி, முகமது ஷமி உள்ளிட்ட 26 வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளன. 

பயிற்சியாளர்கள் ஆர்.பி.ரமேஷ், லலித் குமார், மஹாவீர் பிரசாத், சிவேந்திர சிங் மற்றும் கணேஷ் பிரபாகர் ஆகிய ஐந்து பேருக்கு துரோணாச்சார்யா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மூன்று பயிற்சியாளர்களுக்கும், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments