அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் 31 எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) கொள்முதல் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா திட்டமிட்டுள்ளது.
நீா்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக போா்புரிதல், கடல் பரப்பில் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளை எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்கள் மேற்கொள்ளும்.
அதிக உயரத்தில் நீடித்து உழைக்கும் அந்த ட்ரோன்கள், வானில் 35 மணி நேரத்துக்கும் மேலாக பறக்கக் கூடியவை. அந்த ட்ரோன்களால் 4 ஹெல்ஃபையா் வகை ஏவுகணைகள், சுமாா் 450 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்லமுடியும்.
இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து 31எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் கடந்த ஜூனில் ஒப்புதல் அளித்தது.
31 ட்ரோன்களில் இந்திய கடற்படைக்கு 15 ட்ரோன்கள், ராணுவம் மற்றும் விமானப் படைக்குத் தலா 8 ட்ரோன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட இந்த ட்ரோன்கள், சீனாவுடன் பகிா்ந்துகொள்ளப்படும் எல்லை கோட்டையொட்டிய பகுதியில் இந்தியாவின் கண்காணிப்பை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த ட்ரோன்கள் கொள்முதல் தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் 31 எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்கள் கொள்முதல் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கமாக உள்ளது.
இந்த கொள்முதல் தொடா்பான இந்தியாவின் கோரிக்கை கடிதத்துக்கு அமெரிக்க அரசு பதிலளித்த பின், ஒப்பந்தம் தொடா்பாக இருநாட்டு அதிகாரிகளும் இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நடத்துவா். பேச்சுவாா்த்தையின்போது ட்ரோன்களின் விலை இறுதி செய்யப்படும் என்றாலும், சுமாா் 3 பில்லியன் டாலா் (ரூ.25,000 கோடி) மதிப்பில் அவை கொள்முதல் செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.
அடுத்த சில வாரங்களில் ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவித்தன.
இனி இந்தியர்கள் மலேசியாவுக்கு செல்ல விசா தேவையில்லை! மாஸ் அறிவிப்பு..
Click Here to Join: