உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை சார்நிலைப்பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்லை அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்தது. விண்ணப்பிக்கும் தேதி முடிய போவதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை சார்நிலைப்பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்லை அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: உதவி வேளாண்மை அலுவலர், (79+5) மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் (148 + 31) என மொத்தம் 263 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வரும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து 2 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ (agriculture) முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த விரிவான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்களும் 32 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி/ எம்.பி.சி, பிசி, பிசிஎம், உள்ளிட்ட பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.
சம்பளம் எவ்வளவு: சம்பளத்தை பொறுத்தவரை உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு ரூ.20,600 – 75,900 வரையும், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடத்திற்கு ரூ.20,600 – 75,900 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் ஒரு நாளே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
தேர்வு எப்போது?: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் கணிணி வழி தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். அரசு விதிகளின் படி தேர்வு கட்டண சலுகையும் உண்டு.
தேர்வு குறித்த அறிவிப்பை படிக்க https://www.tnpsc.gov.in/Document/tamil/26_2023-Tam.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.