300 யூனிட் இலவச மின்சாரம் வேண்டுமா? இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்… விவரம்!

திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்கும்.

மாதம் ஒன்றுக்கு 300 யூனிட்களை இலவசமாகப் பெறும் வகையில் சோலார் பேனல்கள் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய தகவலின்படி, இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மூன்று முக்கிய விஷயங்கள் உள்ளன.

அவற்றின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு முன் இந்த திட்டம் பற்றி சுறுக்கமாக தெரிந்துகொள்ளுங்கள். இத்திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா.

இத்திட்டத்தின் மூலம் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்த மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

இத்திட்டத்தின் மூலம், 1 கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்கும்.

இதற்காக மத்திய அரசு பட்ஜெட்டில் சூரிய ஒளி மின் துறைக்கு ரூ.7,327 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த சோலார் பேனல்களை மத்திய அரசு இலவசமாக நிறுவாது.

இவற்றை விரும்புவோர் solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும். அதன் பிறகு சொந்த செலவில் சோலார் பேனல்களை நிறுவ வேண்டும். அதன்பிறகு மத்திய அரசு அவர்களுக்கு மானியப் பணத்தை வழங்கும்.

இந்த மானியம் பெற பயனாளிகள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை..

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சொந்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி வைத்திருக்க வேண்டும். மேலும், அந்த வீட்டிற்கு வரும் மின் கட்டணம் விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் பெயரில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இந்த மூன்றும் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்திய அரசு மானியம் மற்றும் சோலார் பேனல்கள் அமைக்க அனுமதி வழங்கும்.

மானியம் எவ்வளவு?

மானியம் எவ்வளவு என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. மத்திய அரசும் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளது. 3 கிலோவாட் வரை சோலார் பேனல்களை நிறுவுபவர்களுக்கு மத்திய அரசு ரூ.18,000 வழங்கும். அதாவது, 1kwக்கு ரூ.18,000 தருகிறது. 2kw ரூ.36,000 வழங்கப்படும். அதே 3kw சோலார் பேனல்களை நிறுவினால், மத்திய அரசு ரூ.51,000 வழங்கும். அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு 1 கிலோவாட்டிற்கும், மத்திய ரூ.9,000 மானியமாக வழங்கும். ஆனால், இந்த மானியத்தை மத்திய அரசு முன்கூட்டியே வழங்காது. சோலார் பேனல்கள் நிறுவப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த திட்டத்திற்கு solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இந்த தளத்தின் இடது பக்கத்தில் Apply For Rooftop Solar என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் மாநிலம், மாவட்டம், மின் நிறுவன விவரங்கள் மற்றும் நுகர்வோரின் நடப்பு பில் கணக்கு எண்ணுடன் பதிவு செய்யவும். பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். இந்த விண்ணப்பத்தை மத்திய அரசு 15 முதல் 20 நாட்களுக்குள் ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு அனுமதி வழங்கும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments