50 ஆயிரம் ரூபாய் தரும் தமிழக அரசு… முதலமைச்சரின் பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

தேனி: தமிழ்நாட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான முதிர்வு தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அழைப்பு விடுத்துள்ளார்.

மிழக அரசால் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்குழந்தைகள் குறைந்தபட்ச கல்வித் தகுதியான பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறும்பொருட்டு முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

1) ஒரு பெண்குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000/- மும், இரண்டு பெண்குழந்தைகள் தலா ரூ.25,000/-மும் 18 வயது பூர்த்தியடைந்த பிறகு முதிர்வுத் தொகை மற்றும் வட்டித் தொகையுடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறறது. 2) இரண்டாவது குழந்தை பிறந்து மூன்று வருடங்களுக்குள் இருந்தால் தற்போது முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். 3) குழந்தைகளின் தாயார் 35 வயதிற்குள் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். 4) வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 5) இருப்பிடச் சான்று மற்றும் ஆண்வாரிசு இல்லை என்பதற்கான சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகளுடன் தகுதியான அனைத்து பயனாளிகளும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/மண்டல அலுவலகங்களில் விண்ணப்பத்தினை சமர்பிக்கமாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க வேண்டும்.

அதேநேரம் ஏற்கனவே முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து, வைப்புநிதிப் பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/மண்டல அலுவலகங்களில் உள்ள சமூகநல விரிவு அலுவலர்/மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சமூக நலத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் குழந்தைகளுக்கான வைப்புத் தொகையை அரசு செலுத்தும். குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் முதிர்வுத்தொகையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, வைப்புத்தொகை ரசீது பெறப்பட்ட பயனாளிகளில், முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இத்தொகை பெற தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரசீது நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் (சான்றொப்பமிடப்பட்டது), வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். என கூறியுள்ளார்.

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments