71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளதால் 3வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக எந்நேரமும் கூடுதல் நீர் திறந்து விடப்படும் வாய்ப்புள்ளது. இதனால் 3வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோர பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவும், செல்பி எடுக்கவும் வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்