8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை வேலை வாய்ப்பு; 9 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறையின் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

ஊர்தி ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி.ஏ பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900 

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயது வரையிலும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 15,700 – 58,100 

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்டு எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: துணிநூல் துறை, கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம், முதல் மற்றும் இரண்டாம் தளம், 34, கதீட்ரல் தோட்ட சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600034

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tntextiles.tn.gov.in/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments