தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Laboratory Technician Grade 3 மற்றும் Occupational Therapist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 340 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)
பணியின் பெயர்: Laboratory Technician Grade 3 மற்றும் Occupational Therapist
பணியிடங்கள்:
- Laboratory Technician Grade 3 – 332 பணியிடங்கள்
- Occupational Therapist – 8 பணியிடங்கள்
என மொத்தம் 340 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடைசி தேதி: 02.07.2023
வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப (MLT) படிப்பில் (ஓராண்டு காலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Occupational Therapist கல்வி தகுதி:
- மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1997 வரை 6 மாத இன்டர்ன்ஷிப்புடன் தொழில்சார் சிகிச்சையில் 3 வருட இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Laboratory Technician Grade 3 – ரூ.13,000/-
- Occupational Therapist – ரூ.35,400 – 1,12,400/-
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதி(களில்) பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 02.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.