தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியின் சார்பில் கடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் 15 ஆம் தேதி முதல் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்குவதற்கான திட்டம் துவங்கப்பட இருக்கிறது.
மேலும், இந்தத் திட்டத்திற்கான ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரூ.1000 மகளிருக்கான உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதாவது, ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை பெறுவதற்கு 21 வயது நிரம்பிய பெண்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்டும் எனவும், ரூபாய் 1000 உரிமைத்தொகை பெறும் குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
ஐந்து ஏக்கருக்கும் குறைவான நஞ்சை நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவான புஞ்சை நிலம் வைத்துள்ள குடும்பங்களுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும்.
ஒரு ஆண்டுக்கு குடும்ப உபயோகத்திற்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குடும்ப உறுப்பினர்களின் யாரேனும் கீழ்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இல்லாதவர் ஆவர்.
ரூபாய் 2.5 லட்சத்திற்கும் ஆமல் ஆண்டு வரமானம் ஈட்டும் குடும்பங்கள்.
குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில்வரி செலுத்துவோர்.
மாநில ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளில் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களை தவிர) அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் டிராக்டர், கனரக வாகனம், நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள்.
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் விதவை ஓய்வூதியம் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஒப்புதல் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெரும் குடும்பங்கள்.
மேலும், இந்த மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளர்கள் தங்களது கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் தேவைப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் ஜூலை 17 ஆம் தேதிக்குள் இதற்கான கைவிரல் ரேகைப்பதிவு கருவி, நியாயவிலைக் கடைகளில் இருப்பதையும், சீராக வேலை செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை நியாய விலை கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மகளிருக்கான உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது செல்போனை உடன் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் பதிவின் போது கடவுச்சொல் அனுப்பப்படும் என்பதால் செல்போனை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.