எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலை தனது ஆய்வின் மூலம் உலக நாடுகளுக்கு படைசாற்றிய கிளாடியா கோல்டின் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிளாடியா கோல்டின், பல நூற்றாண்டுகளாக பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்கு பற்றிய உலகளவில் முதல் முறையாக விரிவான கணக்கிட்டை வழங்கினார். அவரது ஆராய்ச்சியில் பல்வேறு மாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் பாலின சம்பள இடைவெளி உருவாக முக்கிய ஆதாரங்களை வெளிப்படுத்தியது.
2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெளியிடுவதில் கடைசி விருது தான் இந்த எக்னாமிக் சையின்ஸ் பிரிவு விருது. இந்த விருதை பெண்களின் பங்கீட்டை ஆய்வு செய்து ஒரு பெண் பெற்றுள்ளதன் மூலம் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.