
நாட்டின் கலாச்சாரம் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இதனை பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி “கார்போ“ என்ற தலைப்பில் பாடி வெளியிட்டுள்ளார். தனிஷ்க் பாச்சி இசையமைத்துள்ள இந்தப் பாடலை இயக்குனர் நதீம் ஷா இயக்கியுள்ளார்.
நவராத்திரி விழாவுக்காக நாட்டின் கலாச்சாரம், பன்முகத் தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாடலை எழுதினார். பாடல் வரிகளை குஜராத்தி மொழியில் பிரதமர் நரேந்திர மோடி எழுதினார். இந்நிலையில் அந்தப் பாடலுக்குதனிஷ் பாக்சி இசையமைத்துள்ளார் தற்போது வீடியோ ஆல்பமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி ஆவார்.
190 விநாடிகள் ஓடக்கூடிய இந்த பாடல், கார்போ என்ற தலைப்பு உடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். தற்போது இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தப் பாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறுகையில், “இந்தப் பாடல் எனக்கு பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. நான் பல ஆண்டுகளாக எழுதவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாகும். கடந்த சில நாட்களாக ஒரு புதிய கர்பா பாடலை என்னால் எழுத முடிந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் பிரதமர் மோடி எழுதிய பாடல் பிரதமர் மோடியின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கர்பா வகை பாடலான அது ‘மாடி’ என்ற தலைப்புடன் நவராத்திரி ஸ்பெஷலாக இன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலும் வரவேற்பைப் பெற்று வருகிறது.