![](https://tamizhaacademy.in/wp-content/uploads/2023/10/image-44.png)
நீண்டகால சேமிப்பிற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கிறது ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் RD (Recurring Deposit). RD-ஐ தேர்வு செய்யும் முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர தவணைகள் மூலம் தங்களது நிதியை முதலீடு செய்யலாம். மேலும் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டங்களில் இருந்து பெறுவதை போலவே தங்களது முதலீட்டின் மீது வட்டியையும் பெறலாம்.
அஞ்சலகங்கள் தொடர் வைப்புத்தொகைக்கு வேறுபட்ட வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் வங்கிகள் அவற்றின் சொந்த வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. RD-க்கு போஸ்ட் ஆஃபிஸ்கள் வேறுபட்ட வட்டி விகிதங்களை கொண்டுள்ள அதே நேரம், வங்கிகள் அவற்றின் சொந்த வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கு போஸ்ட் ஆஃபிஸ்கள் மற்றும் SBI, HDFC போன்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களின் ஒப்பீட்டை கீழே பார்க்கலாம்.
RD வட்டி விகிதங்கள்:
டிசம்பர் காலாண்டில் 5 ஆண்டு RD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 6.5% முதல் 6.7% வரை அரசு உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் SBI மற்றும் HDFC ஆகிய 2 வங்கிகளுக்கும் பொருந்தும். SBI வங்கியானது 1 முதல் 10 ஆண்டுகள் வரை மெச்சூரிட்டி பீரியட் கொண்ட RD-க்களுக்கு 5.75% முதல் 7% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரம் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை மெச்சூரிட்டி பீரியட் கொண்ட RD-க்களுக்கு 4.50% முதல் 7% வரை HDFC வட்டி விகிதம் வழங்குகிறது. சரி, இப்போது போஸ்ட் ஆஃபிஸ் vs SBI வங்கி vs HDFC வங்கியின் RD வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம் வாருங்கள்.
இந்தியா போஸ்ட்:
இந்தியா போஸ்ட் வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி 5 வருட மெச்சூரிட்டி பீரியட் கொண்ட RD அக்கவுண்ட் ஓபன் செய்ய விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ.100 அல்லது 10-ன் மடங்குகளில் வேறு ஏதேனும் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். சமீபத்திய தகவலின்படி, இந்தியா போஸ்ட்டில் RD டெபாசிட்ஸ்களுக்கு ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதம் (காலாண்டு கூட்டுத்தொகை – quarterly compounded) வழங்கப்படுகிறது .
SBI :
SBI வங்கி 60 வயதிற்குட்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 6.50% முதல் 6.80% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரம் 60 வயதிற்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு 7% முதல் 7.50% வரை வட்டி விகிதம் வழங்குகிறது. SBI-ன் RD அக்கவுண்டில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் 1 வருடம் முதல் 10 ஆண்டுகள் வரையிலான RD-க்களில் குறைந்தபட்ச வைப்புத் தொகையான ரூ.100-ஐ முதலீடு செய்வதன் மூலம் துவங்கலாம்.
HDFC பேங்க் :
இந்த வங்கி RD-க்கான வட்டி விகிதங்களாக சீனியர் சிட்டிசன்கள் அல்லாதவர்களுக்கு 4.5% முதல் 7% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 5% முதல் 7.75% வரையிலும் வழங்குகிறது. HDFC வங்கியில் RD அக்கவுண்ட் ஓபன் செய்ய விரும்புபவர்கள் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட RD திட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.1,000 டெபாசிட் தொகையுடன் துவங்கலாம்
Click Here to Join: