கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவரது சிலை மும்பை வான்கடே மைதானத்தில் திறக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த சச்சின், 1989- ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கி ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலம் இந்திய அணிக்காக விளையாடினார். சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதங்கள் உட்பட எண்ணில் அடங்காத சாதனைகளை படைத்துள்ள சச்சின், 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவரின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சச்சின் கேலரி அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, மாகராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே திறந்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஐசிசி முன்னாள் தலைவருமான சரத் பவார், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
இந்த பிரமாண்ட சிலையின் கீழ் “உங்கள் பேட்டிங், கிரிக்கெட்டில் இந்தியாவை உயரத்துக்கு கொண்டு சென்றது” ”நீங்கள் நம் தேசத்தின் புதையல் சச்சின்” என்ற புகழ் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது
Click Here to Join: