துணை செவிலிmயர் மருத்துவச்சி / கிராம சுகாதார செவிலியர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 2250 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே தகுதியானவர்கள் உடேன விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- Auxiliary Nurse Midwife / Village Health Nurse பதவிக்கு என மொத்தம் 2250 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 59 க்குள் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்தின் இயக்குனரால் வழங்கப்படும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (பெண்) பயிற்சிப் பாடநெறி / துணை செவிலியர் மருத்துவச்சி பயிற்சிப் படிப்பில் இரண்டாண்டுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் வழங்கிய பதிவு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19500– 62000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வரவேற்கப்பட்டன.
இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click Here to Join: